பாஜக செயல் தலைவர் நிதின் நபின் கோவை வருகை!

 
பாஜக
 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, நலத்திட்டங்கள் என அரசியல் களம் வேகமெடுத்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாமகவும் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளிடையே அரசியல் கணக்குகள் மாற்றம் அடைந்துள்ளதாக பேசப்படுகிறது. கூட்டணியின் அடுத்த கட்ட தேர்தல் திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை கோவையில் நடைபெறும் பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்று, தமிழக அரசியல் நிலவரம், சட்டசபை தேர்தல் தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!