பாஜக நிர்வாகி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு!
பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வரும் குஷீல்குமாரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. சென்னை அடுத்த செங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து 100 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகார் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பொருட்கள் எவ்வாறு திருடுபோனது, யார் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருந்தவர்களிடமும் காவல்துறையினர் தகவல் சேகரித்து வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி வீட்டில் இவ்வளவு பெரிய அளவில் நகை, பணம் திருடுபோன சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
