இது கோபாலபுர குடும்பத்தின் பேராசையின் வெளிபாடு... பாஜக அண்ணாமலை!
Jun 20, 2025, 12:35 IST
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவரது சமூக வலைத்தளப் பதிவில், "வழக்கமாக, கோபாலபுரம் குடும்பத்தினர் ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள்.

ஆனால் இந்த முறை தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் ரூ.3498.8 கோடி அளவுக்கு பணத்தை மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது வெறும் ஊழல் அல்ல; கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் வெளிப்பாடு. மக்களுக்கு பதில் வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
