மாணவிகள் மீது பாஜகவினர் தாக்குதல்.. பதிலுக்கு பாஜக நிர்வாகியை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி!

 
நந்தினி

துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த கல்லூரி  மாணவிகள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு தாக்குதல் நடத்திய பாஜக பெண் நிர்வாகி மீது, தன்னுடைய செருப்பைக் கழற்றி அடித்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவிகளான நந்தினி மற்றும் நிரஞ்சனா என்ற இருவர், 'நாட்டை பற்றி சிந்திப்போம்' என்கிற தலைப்பில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அந்த துண்டு பிரசுரத்தில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

சட்டக் கல்லூரி மாணவிகள் துண்டு பிரசுரங்கல் வழங்கியதை கேள்வி பட்ட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், மாணவிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை மிரட்டினர். பாஜகவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் நிர்வாகிகள் சேர்ந்து, இரண்டு சட்டக் கல்லூரி மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தி, துண்டு பிரசுரங்களைப் பிடுங்கியதாக கூறப்படுகிறது. 

நந்தினி

சம்பவம் குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், இரண்டு சட்டக் கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாட்டு நலனுக்காக போராடும் எங்களை பாஜகவினர் தாக்கினார்கள். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். 

மேலும், நாட்டை பற்றி யோசிக்க சொன்னால், பாஜகவினருக்கு கோபம் தான் வரும். நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் துண்டு பிரசுரம் வழங்குகிறோம். எங்களை கைது செய்வதை ஏற்க மாட்டோம் என மாணவிகள் கூறினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பாஜகவினர் மாணவிகளை தாக்க முயன்றனர்.

நந்தினி

அப்போது அவர்களில் ஒரு மாணவி, தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாஜக பெண் நிர்வாகிக்கு அடி கொடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மாணவிகளையும் வலுக்கட்டயமாக கைது செய்து காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!