குடியரசு நாள் விருந்தில் பாஜக–காங்கிரஸ் மோதல்!

 
ராகுல் காந்தி

குடியரசு நாளையொட்டி, தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிய விருந்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மாநிலங்களவை–மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். விருந்தில் வடகிழக்குப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய ‘கமோசா’ (துண்டு) எல்லா வரவேற்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தி அந்த அஸ்ஸாம் துண்டை கழுத்தில் அணிய மறுத்ததாகவும், குடியரசுத் தலைவர் இருமுறை அறிவுறுத்தியும் அவர் அணியவில்லை என பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், ராகுல் காந்தி மற்றும் குடியரசுத் தலைவரை அவமதித்துவிட்டதாகவும், வடகிழக்கு மாநிலங்களையும் அவமதித்தார் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ராகுல் காந்தி கமோசா அணிந்திருந்தார். அவர் சாப்பிடும்போது அதை மடித்து வைத்தார். இதனை பிரச்னையாக மாற்றியுள்ளனர். குடியரசு நாள் நிகழ்ச்சியில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை மூன்றாவது வரிசையில் அமர வைத்து அவர்கள் அரசியலமைப்பையே அவமதித்துள்ளனர். பாஜகவின் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சியை அவமதிக்கவும், வரவிருக்கும் தேர்தல்களுக்கான பிரச்னை உருவாக்கவும் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!