இந்தியாவை வளர்ந்த நாடாக்க இணைந்து செயல்படுவோம்... காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த பாஜக !

 
பாஜக
 

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் தொடங்கிய மத்திய அமைச்சர் சர்வானந்த சோனாவால், காங்கிரஸ் ஆட்சிக்கால வளர்ச்சி மந்தநிலைக்கும், ஊழல்களுக்கும் கடுமையாக விமர்சனம் முன்வைத்தார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் மற்றும் கொள்கை முடக்கம் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்கம், காமன்வெல்த் விளையாட்டு உள்ளிட்ட ஊழல்கள் நாட்டை பின்னோக்கி தள்ளியதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர், நேர்மை, வெளிப்படை மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி நிலவுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், மோடி தலைமையிலான ஆட்சியில் அந்த மாநிலங்கள் வளர்ச்சி கண்டதாலேயே அங்கு மக்கள் காங்கிரஸை நிராகரித்ததாகவும் அவர் கூறினார். இதேபோல், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் ஆட்சியில் பலவீனமான தலைமையால் நாடு வாய்ப்புகளை இழந்ததாகவும், தற்போது வலுவான தலைமையால் சவால்களை தாண்டி சாதனை படைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு உறுதியான பதில், பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை மோடி அரசின் அடையாளம் எனவும் அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!