இன்று நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உயர்மட்டக்குழுக் கூட்டம் - தேர்தல் உத்திகள் குறித்துத் தீவிர ஆலோசனை!

 
நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் முக்கியமான அரசியல் சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தக் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னை, கிண்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெறுகிறது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத் திட்டங்கள் மற்றும் உத்திகள் வகுக்கப்படும். மாநிலத்தின் தொகுதி வாரியான நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

நயினார்

பலவீனமான பகுதிகளில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். சமூக வாக்கு வங்கி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவுகளும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!