பதற்றத்துல பாஜக... கலக்கத்துல காங்கிரஸ்... ஜேடிஎஸ் யாருக்கு ஜே ஜே போடும்?! சூடு பிடிக்கும் கர்நாடக அரசியல்

 
கர்நாடக தேர்தல்

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியான பாஜகவும், ஆட் சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அங்கு, பா,ஜ.க மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இந்த முறையும் தொங்கு சட்டசபையே அமையும் என கூறப் பட்டிருந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினார்.

தேர்தல் நெருங்க நெருங்க, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் தொடர் பயணங்களால் மற்றும் கள எதார்த்தம் கதற விடுவதாகவும் கர்நாடக அரசியல் களம் தற்பொழுது மாறியுள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமித்ஷா

ஏசியா நெட் நியூஸ் மற்றும் ஜன்கிபாத் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகின. அதில் கூறியிருப்பதாவது பெங்களூர் பகுதியில் 2018ல் நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ 11 இடங்களிலும் ஜேடிஎஸ் 3 இடங்களிலும் வென்றன. இந்த முறை பா.ஜ 15 இடங்களிலும் காங்கிரஸ் 14 இடங்களிலும் ஜேடிஎஸ் 3 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பழைய மைசூரு பகுதியில் 2018 தேர்தலில் ஜேடிஸ் 27 தொகுதியிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் பா.ஜ 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தமுறை பா.ஜ 12 இடங்களிலும் காங்கிரஸ் 23 இடத்திலும் ஜேடிஎஸ் 22 இடத்திலும் வெற்றி பெறும். இதே போல், கர்நாடகாவில் பகுதி வாரியாக கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மொத்தத்தில் 2018 தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பா.ஜ 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும் மற்றவர்களும் 3 இடங்களில் வென்றனர்.

கொடி பாஜக காங்கிரஸ்

இந்த தேர்தலில் பா.ஜ 98 முதல் 109 இடங்களில் வெல்லும். காங்கிரசுக்கு 89 முதல் 97 இடங்கள் வரையிலும் ஜேடி எஸ்சுக்கு 25 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கும். ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலமான 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காது. அதனால், கடந்த முறை போலவே இந்த முறையும் தொங்கு சட்டசபை அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வாத காங்கிரஸ் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி 40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், காங்கிரஸ் நிலைமை மேலும் பரிதாபமாகும். அவர்கள் பிரிப்பது எல்லாமே காங்கிரஸ் ஓட்டுக்களைத் தான் என்கிறார்கள் அரசியல் கள நிபுணர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web