மத்திய அமைச்சர் மகன் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி... .பகீர் வீடியோ!

 
சிந்தியா

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலில், ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகா ஆர்யமன் சிந்தியா காயமடைந்தார். சிவபுரி மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் மாநாடு மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

ஊர்வலின் போது காரின் மேல்புற சன்ரூப் வழியாக வெளியில் நின்று பொதுமக்களை கையசைத்துக் கொண்டிருந்த மகா ஆர்யமன், கூட்ட நெரிசல் காரணமாக ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் சன்ரூப் விளிம்பில் பலமாக மோதினார். இதனால் அவரது நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டது. முதலில் பயணத்தை தொடர்ந்தார், ஆனால் பிச்சோர் நகரில் வலி அதிகரித்ததும் பாதுகாப்புப் படையினர் அவரை சிவபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்தனர்.

சிந்தியா

மருத்துவ பரிசோதனையில் மகா ஆர்யமனுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கட்சி நிர்வாகிகள், “மருத்துவ ஆலோசனையின் படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார்; தீவிர காயம் இல்லை” என தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!