பிஜேபி எம்பி ரத்தன்லால் கட்டாரியா காலமானார்!! முதல்வர் இரங்கல்!!

 
ரத்தன் லால் கட்டாரியா

அரியானா மாநிலம் அம்பாலா எம்.பி லால் கட்டாரியா. இவருக்கு வயது 72 . இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.  அரியானா மாநில பாஜக தலைவரான கட்டாரியா3   முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டு சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ரத்தன் லால் கட்டாரியா

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரியானா மாநில முதல்வர்  மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் இன்று  பிற்பகல்  12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் , பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rip


பாஜக எம்.பி. ரத்தன் லால் 2019 லோக்சபா தேர்தலில், அம்பாலா தொகுதியில்  வெற்றி பெற்றார். ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி செல்ஜாவை கட்டாரியா 57 சதவீத வாக்குகள் பெற்று சுமார் 3.42 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும் பணிபுரிந்தார்.  2000 முதல் 2003 வரை ஹரியானாவின் பாஜக மாநிலத் தலைவராக ரத்தன் லால் இருந்திருக்கிறார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!