வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு... பாஜக வெளிநடப்பு!

இன்று காலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான தங்களின் நிலைபாட்டினை தெரிவித்து தமிழக பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!