ட்ரேடிங் ஆசை... ரூ.4.5 கோடி மோசடி... பாஜக மகளிரணி நிர்வாகி கைது!

 
பாஜக
 

ட்ரேடிங் செய்து அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி செய்ததாக, பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவர் மதிவதனகிரி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவர் ஓசூரில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

போலீஸ்

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. ட்ரேடிங் முதலீட்டில் விரைவில் லாபம் கிடைக்கும் என நம்பவைத்து, பலரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இளம் நடிகர் கைது

இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் ஓசூருக்கு சென்று மதிவதனகிரியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!