கேரள தேர்தல் களம்... பாஜக 47 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு!

 
பாஜக பாஜக

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான 47 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்குப் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம் நேமம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், காழக்கூட்டம் தொகுதியில் வி. முரளீதரனும் போட்டியிடுகின்றனர். அதேபோல், மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான ஜார்ஜ் குரியன் காஞ்சிரப்பள்ளி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். கேரளாவில் காலூன்றத் துடிக்கும் பாஜக, இந்த முறை செல்வாக்குமிக்கத் தலைவர்களைக் களமிறக்கி இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இந்தப் பட்டியலில் பல முக்கியப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பூஞ்சார் தொகுதியில் பி.சி. ஜார்ஜும், வட்டியூர்க்காவு தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர். திருச்சூர் தொகுதியில் பத்மஜா வேணுகோபால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாலக்காடு தொகுதியில் ஷோபா சுரேந்திரன், கோழிக்கோடு வடக்குத் தொகுதியில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் தனித்தொகுதியான சுல்தான்பத்தேரியில் கவிதா கே. எஸ். ஆகியோர் போட்டியிடுகின்றனர். பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட குன்னத்தூர் தொகுதியில் ராஜி பிரசாத்தும், கொட்டாரக்கரை தொகுதியில் ஆர். ரேஷ்மியும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

பாஜக

கேரளாவைப் பொறுத்தவரை மொத்தமுள்ள நூற்று நாற்பது தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் பதினாறாம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் இருபத்தி மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குகள் அனைத்தும் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக, மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்