ஹஜ் பயணிகளை ஏற்றி சென்ற விமானம் தரையிறங்கும் போது சக்கரங்களிலிருந்து கரும்புகை!
குஜராத் மாநிலத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து உலகம் முழுவதும் அனைத்து விமானங்களும் புறப்படும் முன் தீவிர பரிசோதனைக்கு பின்னரே பறக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 242 ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற சௌதியா ஏர்லைன்ஸ் ஜெட்டா-லக்னௌ விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதை அடுத்து விமான நிலையத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இச்சம்பவம் நேற்று காலை நகரின் சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. மேலும் விமானத்தில் இருந்த 242 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். விமானத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஜெட்டாவிலிருந்து 242 ஹஜ் பயணிகளை அழைத்துவந்த சௌதியா விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து பணியாற்றி, கரும்புகை கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் விமானத்திற்கு ஏற்பட்ட சேதம் தவிர்க்கப்பட்டது. விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சௌதியா விமானம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதன் இலக்கை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
