விவரங்களை நிரப்பாமல் வெற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!

 
தவெக தவெக


 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னை சரவணன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவைச் சமர்ப்பித்த அவரிடம், தேர்தல் அதிகாரி மனுவை ஆய்வு செய்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தவெக விஜய் பிரசாரம்

அந்த வேட்புமனுவில் வேட்பாளரின் பெயர், முகவரி, சொத்து விவரங்கள் அல்லது உறுதிமொழி என எவ்விதத் தகவல்களும் நிரப்பப்படாமல், மனு முற்றிலும் காலியாக இருந்தது. இதைக் கண்டு திகைப்படைந்த தேர்தல் அதிகாரி, "விவரங்கள் ஏதுமின்றி வெறும் காகிதத்தை எப்படி வேட்புமனுவாக ஏற்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்து வருமாறு அறிவுறுத்தி, வேட்பாளரை அதிகாரி திருப்பி அனுப்பினார்.

தவெக

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றி கழகம், வேட்புமனுத் தாக்கலின் போதே இத்தகைய ஒரு கவனக்குறைவான செயலில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சரியான ஆவணங்களுடன் மீண்டும் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்துவிட்டு, வேட்பாளர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!