பெரும் சோகம்... சாலையோரத்தில் இருந்த வெடிபொருள் வெடித்ததில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் பலி!

 
ஆப்கான் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில்  பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில்  சாலையோர குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து துணை ஆணையர் ஹஸ்ரத் வாலி சுக்கர் ” ஹர்னை மாவட்டத்தின் ஷாஹ்ராக் பகுதியில் மினி லாரி மீது குண்டு வெடித்ததாகவும், இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  .

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு

பாதிக்கப்பட்டவர் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பாகிஸ்தான்

சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளைக் கைது செய்யத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.இருந்தபோதிலும்  இதுபோன்ற தாக்குதல்களுக்குச் சட்டவிரோத பலூச் விடுதலை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?