' ப்ளட் ஹவுண்ட்ஸ்’ பட ஹீரோயின் மர்ம மரணம்... 24 வயதில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

பிரபல ‘ப்ளட் ஹவுண்ட்ஸ்’ பட நடிகை கிம் சே ரான் 24 வயதில் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. லிஸன் டூ மை ஹார்ட், தி குயின்ஸ் கிளாஸ் ரூம் மற்றும் ஹாய்! ஸ்கூல்-லவ் ஆன் போன்றவைகளில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டு கொண்டாடப்பட்ட நடிகை கிம் சே ரான், நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
24 வயதேயான நடிகை கிம் சே ரான், மர்ம மரணமடைந்திருப்பது ஹாலிவுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கிம் சே ரானின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
நடிகை கிம் சே ரோன் தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். நடிகையின் திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கிம் சே ரான் கடந்த 2009ம் ஆண்டு தனது 9வது வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அவர் கடைசியாக நெட்ஃபிளிக்ஸின் ப்ளட்ஹவுண்ட்ஸில் நடித்திருந்தார். அதில் வூ டோ ஹ்வான் மற்றும் லீ சாங் யி ஆகியோரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?