அடி தூள்... கின்னஸ் புத்தகத்தில் மஹா கும்பமேளா...பக்தர்கள் நெகிழ்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விமரிசையாக நடைபெற்றது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா உலகின் மிக பெரிய ஆன்மிக திருவிழாவாக அனுசரிக்கப்பட்டது உலகம் முழுவதும் இருந்து 65 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கும்பமேளா ஆரம்பம் முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் சாலைகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினர். இந்த கும்பமேளா நிகழ்வில் பல சுவாரசிய நிகழ்வுகளும் நடைபெற்றது.
இறுதி நாளான பிப்ரவரி 26ம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இதுவரை சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக கூறுகின்றனர். அதேபோல் இனி அடுத்த மகா கும்பமேளா 2169ம் ஆண்டு தான் நடைபெறும் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில், புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன.
ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 80 அடி நீளம், 5 அடி அகல துணியில் 10,000 பேர் பங்கேற்று கையால் வரைந்த ஓவியம்; 15,000 துாய்மை பணியாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விழா நடந்த இடத்தில் துாய்மை பணி மேற்கொண்டது உள்ளிட்ட புதிய சாதனைகள் கின்னஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டன. இதற்கான சான்றிதழை முதல்வரிடம் கின்னஸ் அமைப்பினர் வழங்கினர். இதற்கு முன் 10,000 பேர் ஒரே நேரத்தில் துாய்மை பணி மேற்கொண்டதே பெரும் சாதனையாக இருந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!