நாளை விண்ணில் பாயும் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள்... திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு!

 
இஸ்ரோ திருப்பதி

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, தனது வணிக ரீதியிலான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டத் தயாராகிவிட்டது. அமெரிக்காவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 'புளூபேர்ட்' (BlueBird) வரும் புதன்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது. எந்தவொரு பெரிய விண்வெளித் திட்டத்தையும் தொடங்கும் முன்பாக, அதன் மாதிரியைத் திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபடுவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மரபாகப் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று திருமலையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இஸ்ரோ

அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. (AST) நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் சுமார் 6,500 கிலோ எடை கொண்டது. இது விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோபுரங்கள் (Towers) இல்லாத மிகத் தொலைதூர கிராமங்களுக்கும் நேரடியாகச் செல்போன் சிக்னல்களை வழங்குவது மற்றும் அதிவேக இணையதளச் சேவைகளைத் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வளவு பிரம்மாண்டமான செயற்கைக்கோளைச் சுமந்து செல்ல இஸ்ரோவின் வலிமைமிக்க எல்.வி.எம்.-3 (LVM-3) ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து வரும் புதன்கிழமை (டிசம்பர் 24) காலை 8:54 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இதற்கான இறுதிக்கட்டத் தயார் நிலைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நாளை காலை தொடங்க உள்ளது. இதையொட்டி, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மாதிரிகளுடன் திருப்பதி வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ஆனந்த நிலையத்திற்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார். சாமி தரிசனத்திற்குப் பிறகு அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

இயற்கை பேரழிவுகளை துல்லியமாக கணிக்கும் ஆகாய தங்க நிலா... இஸ்ரோ, நாசா  விஞ்ஞானிகள் அசத்தல்!  

இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் 390-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்குப் பெருமளவில் அந்நியச் செலாவணி வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள இந்த அமெரிக்கச் செயற்கைக்கோள் திட்டமும் இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா' (NSIL) நிறுவனத்திற்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!