பகீர்... மீண்டும் படகு விபத்து… கணவன் கண்ணெதிரே மனைவி நீரில் மூழ்கி பலி, நீரில் தத்தளித்த பிள்ளைகள்!

 
புதுச்சேரி

புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதியில் தனியார் சிறிய படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரு குஷால் நகரை சேர்ந்த விஜய் தனது குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேருடன் சுற்றுலா வந்திருந்தார். கடந்த 19ஆம் தேதி அவர்கள் கடலில் சவாரி சென்றபோது திடீரென பலத்த காற்று மற்றும் பெரிய அலைகள் எழுந்தன. அதனால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விஜய்யின் மனைவி சோனியா (33) நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 7 பேர் கடலில் தத்தளித்தனர். அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அனைவரையும் மீட்டனர். சோனியாவின் மகள்கள் சந்தியா, சக்தீஸ்வரி ஆகியோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு உரிமையாளர் விஜயகுமார் மற்றும் படகோட்டி தங்கமணி கைது செய்யப்பட்டனர். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்ற கேள்வியில் விசாரணை தீவிரமாக நடக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!