படகு கவிழ்ந்து 15 பேர் பலி... பலர் மாயம் !
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகே பயணிகள் படகு கவிழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 350-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற அந்த படகு விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்த படகில் 332 பயணிகளும், 27 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 316 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதனை பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது.
இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடலில் மோசமான வானிலை நிலவியதே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
