மீண்டும் படகு சவாரி தொடக்கம்... தூத்துக்குடி மக்கள் உற்சாகம்!

 
தூத்துக்குடி
 

தூத்துக்குடி நகரில் ரோச் பார்க் அருகே உள்ள படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகருக்கு வரும் பயணிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த படகுத் துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

படகு

சவுத் பீச் சாலையில் அமைந்துள்ள இந்த படகுத் துறையை தென்காசியை சேர்ந்த தனியார் நிறுவனம் மீண்டும் செயல்படுத்தியுள்ளது. கயாக் மற்றும் பெடல் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சி.பிரியங்கா படகு சேவைகளை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

தூத்துக்குடி

30 நிமிட படகு சவாரிக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் அக்வா சைக்கிளிங் வசதியும் அறிமுகமாக உள்ளது. கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த இடம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடியின் சுற்றுலா வளர்ச்சிக்கு இது புதிய உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!