திசை மாறிய படகு... 4 மணி நேரம் போராடி நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன்!
பெர்த் நகரைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற சிறுவன், நடுக்கடலில் தத்தளித்த தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளை காப்பாற்ற அலைகளோடு 4 மணி நேரம் போராடி நீந்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 அன்று விடுமுறைக்காக குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்றபோது, பலத்த காற்றால் அவர்களின் படகு கரைக்குத் திரும்ப முடியாமல் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. குடும்பம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த ஆஸ்டின் உடனே கடலில் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார்.
முதல் இரண்டு மணி நேரம் உயிர்காக்கும் கவசம் அணிந்து நீந்திய ஆஸ்டின், அது தனது வேகத்தை குறைப்பதாக நினைத்து அதை கழற்றி எறிந்தார். பின்னர் உயிரைப் பணயம் வைத்து மேலும் இரண்டு மணி நேரம் அலைகளோடு போராடி கரை சேர்ந்தார். கடுமையான களைப்பில் இருந்த போதிலும், அங்கேயே நின்றுவிடாமல் மேலும் 2 கிலோமீட்டர் ஓடிச் சென்று உதவி கோரினார்.
ஆஸ்டின் அளித்த துல்லியமான தகவலின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் அவரது தாய் ஜோன், தம்பி மற்றும் தங்கையை நள்ளிரவில் பத்திரமாக மீட்டனர். மனித சக்தியை மீறிய துணிச்சலை ஆஸ்டின் வெளிப்படுத்தியதாக மீட்புக் குழுவினர் பாராட்டியுள்ளனர். தனது குடும்பத்தை காப்பாற்ற சிறுவன் செய்த இந்த வீரச்செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
