விமான விபத்தில் பலியான 157 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

 
விமான விபத்து
 


 ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட   ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்து  இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.  இதில் 241 பயணிகள் மற்றும் 38 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான விபத்து

அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி, ஜூன் 18, 2025 காலை 10:45 மணி வரை, 190 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் அவர்களின் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதில் 123 பேர் இந்தியர்கள், 27 பேர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர், மற்றும் 4 பேர் விமானத்தில் பயணிக்காதவர்கள்  . இதுவரை 157 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.  

விமான விபத்து
விபத்தின் தீவிரத்தால் பெரும்பாலான உடல்கள் எரிந்தோ அல்லது சிதைந்தோ காணப்பட்டன. இதனால்   டிஎன்ஏ பரிசோதனை மூலமே அடையாளம் காண முடிந்தது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்திநகரில் உள்ள தடயவியல் ஆய்வகம்  மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின்   குழுக்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றன.  
இந்த பரிசோதனைகளை விரைந்து செய்ய  மாநில அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். விபத்தில் ஒரே ஒரு பயணி, பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ்குமார் ரமேஷ், அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளார்.   அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ளார்.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது