கோயில் குளியலறையில் 2 மாணவிகள் சடலம்... விஷம் செலுத்தி தற்கொலை?
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயில் வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்றதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய இரு மாணவிகளும் மதியம் வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
#Gujarat: 2 college students were found dead inside a bathroom at a Swaminarayan Temple complex in Surat. Police suspect suicide by injecting poisonous drugs after recovering a syringe and three bottles of toxic substances near the bodies.
— The Pioneer (@TheDailyPioneer) March 7, 2026
The girls had left home for college on… pic.twitter.com/N4ohXDG8Zk
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதலில் கோயில் வளாகத்தில் அவர்களின் மொபைல் போன்கள் கடைசியாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் ஸ்கூட்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு காட்சிகளில் மாணவிகள் குளியலறை நோக்கி செல்வது பதிவாகியிருந்தது

.
பின்னர் குளியலறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அருகில் சிரிஞ்ச் மற்றும் விஷ மருந்து பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிந்த பிறகே மரணத்தின் சரியான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
