பூட்டிய வீட்டுக்குள் 2 சகோதரிகள் சடலமாக மீட்பு - திருவள்ளூரில் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில், கடந்த சில நாட்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு வீட்டின் உள்ளே வசித்து வந்த இரண்டுச் சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உறவினர்கள் யாரும் இல்லாமல் அந்தச் சகோதரிகள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்டச் சகோதரிகளின் வீடு சில நாட்களாகப் பூட்டப்பட்டு கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் அந்த இரண்டுச் சகோதரிகளின் சடலங்களும் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்களைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த அந்தச் சகோதரிகள் உயிரிழந்ததற்கானச் சரியானக் காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலையா? அல்லது உணவின்றிப் பட்டினியால் உயிரிழந்தனரா? என்ற இரண்டு கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், அவர்கள் உயிரிழந்துப் பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. போலீசாரின் விசாரணையின் முடிவிலேயே உயிரிழப்புக்கான சரியானக் காரணம் தெரியவரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
