லஞ்சம் தரல... சடலத்தை நிர்வாணமாக ஒப்படைத்த ஊழியர்கள்… உறவினர்கள் கதறல்... பகீர் வீடியோ!

 
சடலம்
 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிரேத பரிசோதனை மையத்தில் மனிதநேயத்தை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த ஒருவரின் உடலை மூடுவதற்கான மறைப்புத் துணி வழங்க ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் பணம் வழங்க முடியாததால், அந்த சடலத்தை ஊழியர்கள் ஆடையின்றி நிர்வாணமாகவே ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துக்கத்தில் இருந்த குடும்பத்தினர் இதனால் கடும் வேதனை அடைந்தனர். அங்கிருந்தவர்களும் இந்த செயலை கண்டித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!