தெலுங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு... ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலம், தோமலபென்டா பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி சுரங்க விபத்து ஏற்பட்டதில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் தோமலபென்டா பகுதியருகே அமைந்த சுரங்கம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, திடீரென சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில் சிலர் தப்பிய போதும் சுரங்கத்தினுள் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 14 கி.மீ. நீள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது. கேரளாவில் இருந்து மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 வார கால மீட்பு பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இயந்திரத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், அவருடைய கை மட்டுமே வெளியே தெரிகிறது. அவர் குர்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!