விமான நிலையத்தில் சுங்க சோதனைக்கு ‘பாடி வார்ன்’ கேமரா… !
சென்னை உள்ளிட்ட பல விமான நிலையங்களில் சுங்க சோதனையின்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதிகாரிகளின் சட்டை பாக்கெட்டுகளில் ‘பாடி வார்ன் கேமரா’ அணிய வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கேமரா மூலம் சோதனைகள் வீடியோ, ஆடியோவாக பதிவு செய்யப்பட்டு, தேதி, நேரத்துடன் கம்ப்யூட்டர்களில் சேமிக்கப்படும். புகார் வந்தால், அந்த பதிவுகளை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 8 ‘பாடி வார்ன்’ கேமராக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 24 கேமராக்கள் விரைவில் வர உள்ளன. வருகை பகுதியிலுள்ள கிரீன் சேனல், ரெட் சேனல் ஆகிய இரு வழிகளிலும் அதிகாரிகள் இந்த கேமராவை அணிந்து சோதனை மேற்கொள்வார்கள்.

கடந்த காலங்களில் சுங்க சோதனை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு பெண் பயணி தாலி கழற்றச் சொன்னதாக புகார் அளித்த சம்பவமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த புதிய திட்டம் சென்னை மட்டுமின்றி, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்க வேண்டும் என பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
