பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்... கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட கொடுமை!

 
ஆதித்ய சிங்

பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய சிங் கழிவறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இவருக்கு வயது 32. ஆதித்ய சிங்  அந்தேரி லோகண்ட்வாலாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வந்தார். நேற்று திடீரென பாத்ரூம்பில் மயங்கி விழுந்துவிட்டார். அவரது வீட்டு பணிப்பெண் இதனை பார்த்து  கட்டட வாட்ச்மேனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக  ஆதித்யசிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சோதித்து பார்த்த போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

ஆதித்ய சிங்

கடந்த 2 நாட்களாக ஆதித்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக நண்பர்கள் கூறுகின்றனர். அவரது வீட்டில் அவரது நண்பர் ஒருவரும் தங்கி இருந்தார். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம்  தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்  அளவுக்கு அதிகமாக மருந்து பயன்படுத்தியதால் ஒருவேளை உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து அவரது நண்பர்களிடம் விசாரித்த போது ஆதித்யாவும் அவரது நண்பர்களும் நேற்று அதிகாலை வரை பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். நேற்று பிற்பகலில் ஆதித்யாவிற்கு வாந்தி வந்ததால் உடனே பாத்ரூமுக்கு ஓடினார்.  அங்கு அவர் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.

ஆதித்ய சிங்

அவருடன் அவரது அறையில் தங்கி இருந்த நபர், பணிப்பெண் உதவியுடன் கட்டட வாட்ச்மேனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு  ஆதித்யாவை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் வசித்துவரும் ஆதித்யாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் ஆதித்யாவுடன் தங்கி இருந்த அவரது நண்பர் மற்றும் கட்டட வாட்ச்மேன் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் வசித்து வரும் ஆதித்ய சிங் தனது 17 வயது முதல் மாடலிங்க்கில் ஈடுபட்டு வருகிறார். இவர் தலைநகர் டெல்லியில் தனது படிப்பை முடித்தவர்.  ஆதித்யா ஏராளமான படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். அவரது திடீர் மரணம் பாலிவுட்  திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மாடலிங் துறையில் ஆதித்ய சிங் 125க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது திடீர் உயிரிழப்பிற்கு திரையுலக நட்சத்திரங்கள், மாடலிங்க்கில் நண்பர்கள், உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web