போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்… பெரும் பரபரப்பு!
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. திடீரென நடந்த தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 காவலர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தாக்குதல் நடந்தபோதும் குற்றவாளிகள் இருவரும் போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்கப்படுகின்றனர்.
ரவுடி வெள்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 22 ஆண்டுகளில் பழிக்குப் பழியாக 21 கொலைகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், அதே தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
