பாஜக தலைவர் மகன் கார் மீது வெடிகுண்டு தாக்குதல்..!!

 
விஜயலக்‌ஷ்மி சண்டேல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் மாவட்டத்தில், மாநில பாஜகவில் முக்கிய தலைவரான விஜயலக்‌ஷ்மி சண்டேல். இவது மகன் விதான். 20 வயதான இவர் கடந்த இரவு அவரது தாய்மாமன் வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது அவர் சென்ற சஃபாரி கார், ஜூஷி பகுதியில் சென்றபோது, பைக்கில் வந்த ஆறு இளைஞர்கள் காரை வழிமறித்துள்ளனர். இதில் ஒரு காவலர் மகனும் இருந்ததாகத் தெரிகிறது. 

விஜயலக்‌ஷ்மி சண்டேல்

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த குண்டுகளை கார் மீது வீசியுள்ளனர். ஆனால் நல்வாய்ப்பாக விதானும் அவருடன் இருந்த நபரும் பெரியளவில் காயமின்றி உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாண்டேல் ஜூஷி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் விஜயலக்‌ஷ்மி சண்டேல் மகனை நோக்கி நடத்தப்பட்ட இத்தாக்குதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயலக்‌ஷ்மி சண்டேல்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகளின்படி குண்டு வீச்சில் கார் பலத்த சேதமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதானுக்கும் காரில் குண்டு வீசியவர்களில் ஒருவரான சிவம் யாதவுக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. சிவம் யாதவ், போலீஸ் கான்ஸ்டபிளின் மகன் என்பதும் தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web