வங்கதேசத்தில் குண்டுவெடிப்பு பயங்கரம்… பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!
வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டம் ஜாஜிரா உபசிலாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 22 வயதான முகமது நபின் ஹொசைன், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றொருவரான 25 வயது அர்மான் நயன் மொல்லா, இன்னும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வெடிப்பு வியாழக்கிழமை அதிகாலை பிலாஷ்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேபாரிகண்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தால் வீடு முற்றிலும் சேதமடைந்து, கூரை தூக்கி எறியப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் 32 வயதான சோஹன் பேபாரியின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது. இந்த உடல் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுகள் தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தே இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
