முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு!

 
ஸ்டாலின் வெடிகுண்டு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசிக்கும் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு இன்று மதியம் திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல், தலைநகர் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். முதலமைச்சரின் இல்லம் அமைந்துள்ள பகுதி என்பதால், உடனடியாக உஷாரான பாதுகாப்புப் படையினர் மற்றும் மோப்ப நாய் பிரிவு நிபுணர்கள் அங்கு விரைந்தனர்.

ஸ்டாலின்

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முதலமைச்சர் இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாகச் சோதிக்கப்பட்டதில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இறுதியில், இது ஒரு வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டதைக் கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். அதே சமயம், இத்தகைய மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதைத் தேடும் பணியில் சைபர் கிரைம் போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அதிரடியாக இறங்கினர்.

வெடிகுண்டு மிரட்டல்

மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் சிக்கினார். அவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ஒரு நபர் வினோத்குமாரைத் தாக்கியுள்ளார். இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஒட்டுமொத்த காவல்துறையையும் அலறவிட வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில் முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். வதந்தி பரப்பி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வினோத்குமாரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!