ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தாய்லாந்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விமானத்தில் 156 பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குளியலறை சுவரில் டெல்லி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மிரட்டல் குறித்து விமான பைலட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, பாதுகாப்புப் பணியாளர்கள் 156 பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மிரட்டல் குறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தீவிர சோதனையை அடுத்து விமானத்தில் எந்த வெடி குண்டும் இல்லை எனவும் இது புரளி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் விமானத்தில் பயணம் செய்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!