அஜீத் வீடு உட்பட 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
அஜீத்
 

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில்கள் வந்ததால் நேற்று முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் இல்லத்திற்கு வந்த மெயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டதைத் தொடர்ந்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அது புரளி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது.

குஷ்பூ

அதேநேரத்தில், இரவு முதலே நடிகர் அஜித் குமார், அரவிந்த் சாமி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், லிவிங்ஸ்டன், கங்கை அமரன், திண்டுக்கல் ஐ லியோனி, சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இதே போலியான மெயில்கள் வந்தன. மொத்தம் 11 இடங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் முழு அணிவகுப்புடன் சோதனையில் இறங்கின. ஆனால் எந்த இடத்திலும் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை.

வெடிகுண்டு மிரட்டல்

தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், முக்கிய அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதால் சைபர் கிரைம் பிரிவு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. மெயில்களை அனுப்பிய நபரை கிட்டத்தட்ட அடையாளம் கண்டுவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளதால், கைது எப்போது என்பதை நோக்கி விசாரணை தீவிரமாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!