பக்தர்கள் அதிர்ச்சி... பிரபல கோவிலுக்கு அருகே கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள்!

 
வெடிகுண்டு
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள  மல்லிகார்ஜுனர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீசைலம்
இந்நிலையில், நேற்று இக்கோயிலுக்கு மிக அருகே வாசவி சத்திரத்தின் எதிரே உள்ள சாலையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததாக போலீசாருக்கு அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.    அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் உதவியோடு, அந்த பையை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.  

ஸ்ரீசைலம்


அப்போது அந்த பையில் 4 நாட்டு கையெறி குண்டுகள், 9 பெரிய தோட்டாக்கள், 4 சிறிய ரக தோட்டக்கள் இருந்தது  கண்டறியப்பட்டது. இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து, யார் இந்த பையை இங்கே விட்டுச் சென்றது என கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஏதாவது நாச வேலையாக இருக்குமோ ? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது