பத்திரம் மக்களே... மார்ச் 16 வரை 3 டிகிரி வெயில் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

 
வெயில் வெயில்

பத்திரமாக இருங்க மக்களே... அவசியமில்லாமல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையில் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

அதே சமயம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட சுமார் 3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெயில்

இதற்கிடையில் நேற்று காலை 8.30 மணி வரை தூத்துக்குடி விமான நிலையம் பகுதியில் 7 செ.மீ மழையும், தூத்துக்குடி நகரில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!