வாவ்... சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா:.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!
Jun 10, 2025, 11:48 IST
சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சென்னை புத்தகப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.

பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ. 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தையும் தொடக்கி வைத்தார்.
