கோவை–திருச்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தொடக்கம்!
தமிழ்நாடு அரசு சார்பில் கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உருவாகும் காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த நூல்களும், மின்னூல்களும் இதில் இடம்பெற உள்ளன.

அறிவியல், மருத்துவம், கணினி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் புகழ்பெற்ற நூல்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த நூல் கொள்முதல் பணியை தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்கம் மேற்கொண்டு வருகிறது. புதிய அறிவுலகங்களை அறிவு மையங்களாக உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்முதலில் பங்கேற்க விரும்பும் பதிப்பாளர்கள், www.annacentenarylibrary.org என்ற இணையதளத்தில் “புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்” என்ற பிரிவில் உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும். நூல் விவரங்களை 26.12.2025 மாலை 5 மணிக்குள் பதிவேற்ற வேண்டும். தேர்வுக்காக ஒரு மாதிரி நூலை 29.12.2025 முதல் 5.1.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
