சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 2000 ஆக குறைப்பு!

 
சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை
 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஐயப்ப விக்ரகத்திற்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டு சபரிமலை நோக்கி செல்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டனர்.

சபரிமலை

மண்டல பூஜைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட 5,000 எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இரு நாட்களிலும் தலா 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை

அதே நேரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் டிசம்பர் 26-ம் தேதி 30 ஆயிரம் பக்தர்களும், 27-ம் தேதி 35 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் கற்பூர ஆழி பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!