இன்று முன்பதிவு துவக்கம்... நெல்லை, கோவை, ராமேஸ்வரத்துக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
ரயில்வே  முன்பதிவு

பொங்கல் தொடர் விடுமுறைக்கு பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தென் மாவட்ட ரயில்கள்:

நாகர்கோவில் – தாம்பரம் (06012/06011): ஜனவரி 11, 18 (ஞாயிறு) ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.15-க்குத் தாம்பரம் சென்றடையும்.

கன்னியாகுமரி – தாம்பரம் (06054/06053): ஜனவரி 13, 20 (செவ்வாய்) ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும்.

திருநெல்வேலி – செங்கல்பட்டு (06156, 06158): ஜனவரி 9, 16 (வெள்ளி) மற்றும் ஜனவரி 10, 17 (சனி) ஆகிய நாட்களில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 3.45க்குப் புறப்பட்டு மதியம் 1.15-க்குச் செங்கல்பட்டை அடையும்.

 எக்ஸ்பிரஸ் ரயில்

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (06070): ஜனவரி 8 (வியாழன்) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.30-க்கு எழும்பூர் வரும்.

ராமேஸ்வரம் – தாம்பரம் (06106/06105): ஜனவரி 13, 20 (செவ்வாய்) ஆகிய நாட்களில் இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக மறுநாள் காலை 10.15-க்குத் தாம்பரம் சென்றடையும்.

கோவை மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள்:

கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் (06034/06033): ஜனவரி 11, 18 (ஞாயிறு) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.50-க்குச் சென்னையை அடையும்.

போத்தனூர் – சென்னை சென்ட்ரல் (06024/06023): ஜனவரி 14, 21 (புதன்) அதிகாலை 12.35 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு, சேலம் வழியாக காலை 10.30-க்குச் சென்னையை அடையும்.

ஈரோடு – செங்கோட்டை (06025): ஜனவரி 13 (செவ்வாய்) மாலை 4 மணிக்குப் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாகச் சென்று மறுநாள் காலை 11.30-க்குச் செங்கோட்டையை அடையும்.

ரயில் முன்பதிவு

மற்றொரு முக்கிய ரயில்:
மங்களூரு – சென்னை சென்ட்ரல் (06126): ஜனவரி 13 (செவ்வாய்) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு, பாலக்காடு, கோவை, சேலம் வழியாக அன்று இரவு 11.30-க்குச் சென்னையை அடையும்.

பயணிகள் IRCTC இணையதளம் வாயிலாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவோ தங்களது பயணச் சீட்டுகளை இன்று காலை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் சமயம் என்பதால் டிக்கெட்டுகள் மிக விரைவில் காலியாக வாய்ப்புள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. உங்கள் பயணத் தேதியையும் ரயில் எண்ணையும் சரிபார்த்து முன்பதிவு செய்யவும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!