இன்று முன்பதிவு துவக்கம்... கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06165), மேற்கண்ட அதே வழித்தடங்கள் வழியாகப் பயணித்து மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும். இந்தப் பயணத்திற்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பண்டிகை காலப் பயணம் என்பதால், பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
