விரைவில் தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் ?

தமிழகத்தின் முன்னணி நடிகர் இளையதளபதி விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச்28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கோவையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூத் கமிட்டி மாநாடு நடத்த பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!