அடிப்பாவி... மொத்தமா போச்சே... வாய் தகராறில் நண்பனின் காதை கடித்து மென்று விழுங்கிய இளைஞர்!

 
காது அடிதடி தகராறு

என்ன தான் வாய் தகராறு என்றாலும் ஒருத்தனுக்கு இத்தனைக் கோபம் ஆகாது என்று முணுமுணுத்தப்படியே அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றிருப்பார்கள். விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட வாய் தகராறில் நண்பர் என்றும் பார்க்காமல் நண்பனின் காதை கடித்து, இளைஞர் ஒருவர் மென்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காது

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள பட்லி பாடா பகுதியில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு  நடைபெற்ற  விருந்து நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்காக 37 வயது ஷரவன் லீகா   தன்னுடைய நண்பர் 32 வயது விகாஸ் மேனனுடன்  சென்றிருந்தார். இந்நிகழ்ச்சியில்  திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே கோபத்தில் விகாஸ் மேனன் தன்னுடைய நண்பனின் காதை கடித்துவிட்டார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துக் கொண்டிருந்த போது  அவரது நண்பர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அழுத்தமாக கடித்தார். இதில் காது துண்டாகி விட்டது. 

தாக்குதல் குற்றம் க்ரைம்

இந்நிலையில் அந்தக் காதை அவர் கடித்து மென்று விழுங்கிவிட்டார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் லீகாவாவை மீட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில்  விகாஷ் மேலனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web