செல்போன் பேசியபடி பைக் ஓட்டிய கல்லூரி மாணவன் சாலை தடுப்பில் மோதி பலி.... பிறந்தநாளிலே பெரும் சோகம் !

 
கல்லூரி மாணவன் சாலை தடுப்பில் மோதி பலி
திருநெல்வேலி மாவட்டத்தில்  மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதலாக பலத்த மழை பெய்து வந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சைபர் செக்யூரிட்டி பிரிவில், 2 ம் ஆண்டு படித்து  வரும் மாணவர்கள் 20 மற்றும் 21 வயதில் இன்பராஜ்,  கதிர்.  

இவர்களில் இன்பராஜ் ஊத்துமலை, ரெட்டியார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்  நண்பர்களான இருவரும், நேற்று தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கதிர் வாகனத்தை இயக்கி இருக்கிறார். மானூர், மாவடி பகுதியில் வந்தபோது, கதிரின் செல்போன் மழை நீரில் நனைந்து இருக்கிறார்.

ஆம்புலன்ஸ்
 
இதனால் வாகனத்தை இயக்கியபடி செல்போனை எடுக்க முற்படவே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், சாலையை விட்டு விலகிச் சென்று, தடுப்பில் மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த இன்பராஜ், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  காவல்துறையினர், கதிரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  

போலீஸ்
இன்பராஜ் விபத்தில் உயிரிழந்தது உறுதியானதால், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளில்  இன்பராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?