கடலில் குளித்த சிறுவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!

சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் தனியாக குளிக்கச் சென்ற சிறுவன், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவெற்றியூர் ஜெய்ஹிந்த் நகர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவாது மகன் பரத்(17) நேற்று ஜூன்.15ம் தேதி எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தனக்கு நீச்சல் தெரியும் என்று தனியாக கடலில் இறங்கி குளித்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென எழுப்பிய ராட்சத அலையில் பரத் சிக்கி மாயமானார்.
இந்நிலையில் அவரது உடல் இன்று காலை கரை ஒதுங்கியதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்த தகவலையறிந்த எண்ணூர் தீயணைப்பு துறையினர் கண்டெடுக்கப்பட்ட பரத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!