டிராக்டர் மோதி சிறுவன் பலி.. உறவினர் வீட்டு விசேஷத்தில் சோகம்!

 
பலி

உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சிறுவன், சாலையை கடக்க முயன்றதில் வேகமாக வந்துக் கொண்டிருந்த டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிகுடம் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்தார். 

பள்ளி மானவி தற்கொலை

இதனிடையே, தம்பதி தங்கள் மகனுடன் அருகே உள்ள சூர்யபேட் மாவட்டம் நிமிகலு டங்கு என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கோவிலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் மோக்சித் திடீரென கோவில் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளான்.

விபத்து

அப்போது சாலையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் சிறுவன் மோக்சித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது