#Boycott SaiPallavi .... ட்ரெண்டிங்கில் சாய் பல்லவி ஹேஷ்டேக்!

 
சாய் பல்லவி
 


 தமிழ் சினிமாவில் அமரன் படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இவர் தனது எக்ஸ்  பக்கத்தில்   பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'பஹல்காமில் நடந்த தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு, வலி மற்றும் பயம் எனக்கு மிகவும் தனிப்பட்டதாக உணர்கிறேன். வரலாற்றில் நடந்த கொடூர குற்றங்களைப் பற்றி அறிந்தும், இன்னும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைக் காணும்போது, எதுவும் மாறவில்லை என்பதை உணர்கிறேன். அந்த மிருகக் கூட்டம் (பயங்கரவாதிகள்) எஞ்சியிருந்த சிறிய நம்பிக்கையையும் அழித்துவிட்டது' என்று சாய் பல்லவி குறிப்பிட்டிருந்தார். 


'பஹல்காமில் நடந்த தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு, வலி மற்றும் பயம் எனக்கு மிகவும் தனிப்பட்டதாக உணர்கிறேன். வரலாற்றில் நடந்த கொடூர குற்றங்களைப் பற்றி அறிந்தும், இன்னும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைக் காணும்போது, எதுவும் மாறவில்லை என்பதை உணர்கிறேன். அந்த மிருகக் கூட்டம் (பயங்கரவாதிகள்) எஞ்சியிருந்த சிறிய நம்பிக்கையையும் அழித்துவிட்டது' என்று சாய் பல்லவி குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, காஷ்மீரி பண்டிட்கள் படுகொலைக்கும், மாடுகளைக் கடத்துபவர்கள் கொலைக்கும் இடையே ஒப்பீடு செய்து சாய் பல்லவி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், தனது கருத்துக்கு விளக்கம் அளித்த அவர், 'மதத்தின் பெயரால் நடக்கும் எந்த வன்முறையையும் நான் கண்டிக்கிறேன். வன்முறை எந்த வடிவத்திலும் தவறு' என்று கூறியிருந்தார்.

2022ம் ஆண்டு அளித்த பேட்டியொன்றில், 'பாகிஸ்தானில் உள்ள மக்கள் நம் ராணுவத்தை பயங்கரவாதக் குழுவாகக் கருதுகின்றனர். ஆனால், நம் பார்வையில் அவர்கள்தான் பயங்கரவாதிகள். எனவே, பார்வை மாறுபடுகிறது. நாம் வன்முறையைப் புரிந்துகொள்ளவில்லை' என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிரி நாட்டு ராணுவத்தினர் மீது கருணை காட்டக் கூடாது. அவர்கள் நம் நாட்டின் எதிரிகள் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

null


தற்போது, காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சாய் பல்லவி கடும் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது முந்தைய கருத்துகளை நினைவுகூர்ந்த பலர், #BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?