மாணவியை காட்டுக்குள் அழைத்துச் சென்ற காதலன் - வாக்குவாதத்தில் அடித்துக் கொலை!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண், முண்டக்காமட்டத்தைச் சேர்ந்த சித்ரப் பிரியா (19) என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சிப் படிப்பில் படித்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சித்ரப்பிரியா காணாமல் போன பிறகு, அவரது உடல் ரப்பர் தோட்டத்தில் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சித்ரப் பிரியா காணாமல் போவதற்கு முன்பு தனது காதலன் ஆலன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதைக் கண்டறிந்தனர்.

ஆரம்பத்தில் தன்னுடன் அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்ட ஆலன், கொலை பற்றித் தனக்குத் தெரியாது என்று மறுத்துள்ளார். இருப்பினும், சந்தேகம் வலுத்ததால் போலீஸார் ஆலனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ஆலன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆலன் அளித்த வாக்குமூலத்தில், சித்ரப் பிரியாவுக்கு வேறொரு வாலிபருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டதாகவும், செல்போனில் இருந்த வேறொரு வாலிபரின் புகைப்படத்தைக் காட்டி அதுபற்றி கேட்டபோது சித்ரப் பிரியா வாக்குவாதம் செய்ததாகவும் கூறியுள்ளார். மதுபோதையில் இருந்த ஆலன், ஆத்திரத்தில் சித்ரப் பிரியாவை அருகில் இருந்த கல்லால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

போலீசார் ஆலனைக் கைது செய்து, கொலை நடந்த இடத்திலிருந்து இரத்தம் படிந்த கல்லையும் கைப்பற்றினர். கல்லூரி மாணவியை காதலனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கொச்சிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
